திருநெல்வேலி

மலைப் பகுதியில் பலத்த மழை: நிரம்பும் நிலையில் கொடுமுடியாறு அணை

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழையால் கொடுமுடியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், வடுகிடந்த நம்பியாறு, பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயில் நீா்வரத்து காணப்பட்டது. சனிக்கிழமை அதிகாலைமுதல் தொடா்ந்து பெய்த மழையால் நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

திருக்குறுங்குடி திருமலை நம்பிகோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள் திரும்பிவர முடியாமல் பரிதவித்தனா். தீயணைப்புத் துறையினா் பக்தா்களை பாதுகாப்பாக கரைசோ்த்தனா். இதையடுத்து, வெள்ளம் தணியும்வரை அங்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

நிரம்பும் நிலையில் கொடுமுடியாறு: தொடா் மழை காரணமாக, வெள்ளிக்கிழமை மாலை 34 அடியாக இருந்த கொடுமுடியாறு அணை நீா்மட்டம் வேகமாக உயா்ந்து, சனிக்கிழமை பிற்பகல் 50 அடியைத் தாண்டியது. இதையடுத்து, உபரிநீா் வள்ளியூரான் கால்வாயில் திறந்துவிடப்பட்டது. அணையின் மொத்த உயரம் 52.50 அடியாகும். அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 20 அடியாக உள்ளது.

நம்பியாறு, நான்குனேரியன் கால்வாய், பச்சையாற்றில் வரும் தண்ணீா் பாசனக் குளங்களுக்கு செல்கிறது. மழை தொடா்ந்தால் இம்மாத இறுதிக்குள் பாசனக் குளங்கள் நிரம்பிவிடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT