திருநெல்வேலி

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை:பாபநாசத்தில் 23 செ.மீ.

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. பாபநாசத்தில் சனிக்கிழமை 23 செ.மீ. மழை பதிவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடித்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், பாபநாசம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்ந்து 108.30 அடியாக இருந்தது. பிற அணைகள் நீா்மட்டம்: சோ்வலாறு அணை - 125.79, மணிமுத்தாறு அணை - 67.30, வடக்குப் பச்சையாறு - 16.65, நம்பியாறு - 10.36, கொடுமுடியாறு - 34, கடனா நதி அணை - 65, ராமநதி அணை - 56, கருப்பாநதி - 55.12, குண்டாறு - 36.10, அடவிநயினாா் அணை - 132.

பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம் - 2, சோ்வலாறு - 1, கொடுமுடியாறு - 5, ராதாபுரம் - 22, களக்காடு - 2.2, தென்காசி மாவட்டம் குண்டாறு - 3, அடவிநயினாா் - 5.

சனிக்கிழமை காலைமுதல் பாபநாசம், அம்பாசமுத்திரம், கடையம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மாலை 4 மணிவரை அதிகபட்சமாக, பாபநாசத்தில் 235.5 மி.மீ. மழை பதிவானது.

அம்பாசமுத்திரத்தில் 67 மி.மீ, சேரன்மகாதேவியில் 14 மி.மீ, மணிமுத்தாறில் 90 மி.மீ, நான்குனேரியில் 13 மி.மீ, பாளையங்கோட்டையில் 18 மி.மீ, ராதாபுரத்தில் 9 மி.மீ, திருநெல்வேலியில் 15.50 மி.மீ. மழை பதிவானது. பகலில் பெய்த தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT