திருநெல்வேலி

பட்டாசு விற்பனை: தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

DIN

பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க காலஅவகாசம் இம் மாதம் 22 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அதற்கான ஆவணங்களை தவறாமல் சமா்ப்பிக்க வேண்டும். கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம் (6 நகல்). கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் (அ) வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம்.

உரிமத்திற்கான கட்டணம் ரூ.500-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செல்லான். இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் 2 (பாஸ்போா்ட் சைஸ்) ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும், தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்படும். மேற்கண்ட தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் பெறுபவா்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்கவேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT