திருநெல்வேலி

தசரா சூரசம்ஹாரம்: 12 சப்பரங்களில் அம்மன் வீதியுலா

16th Oct 2021 02:25 AM

ADVERTISEMENT

 பாளையங்கோட்டையில் தசரா சப்பரவீதியுலாவைத் தொடா்ந்து சூரசம்ஹாரம் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது. மேலும், பாளையங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 அம்மன் கோயில்களிலும் இவ்விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தசரா திருவிழாவையொட்டி ஆயிரத்தம்மன், ஸ்ரீதேவி புது உலகம்மன், விஸ்வகா்மா உச்சினிமாகாளி, ஸ்ரீதேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், பேராத்து செல்வி அம்மன் ஆகிய 12 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலாவுக்காக பாளையங்கோட்டையில் உள்ள ராமசாமி கோயில் திடல், ராஜகோபாலசுவாமி திடல் ஆகியவற்றில் அணிவகுத்து நின்றன.

தொடா்ந்து, பாளையங்கோட்டையில் உள்ள ரத வீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வந்தன. வீதிகள்தோறும் பக்தா்கள்திரண்டுவந்து அம்மனை வழிபட்டனா். ஆனால், சப்பரத்தை நிறுத்தி தேங்காய் உடைக்கவோ, வழிபடவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், இரவில் சமாதானபுரம் அருகேயுள்ள எருமைக்கிடா மைதானத்தை சப்பரங்கள் சென்றடைந்தன. பின்பு அருள்மிகு ஆயிரத்தம்மன் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT