திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் அக்.18 முதல் குடும்ப நலசிறப்பு முகாம்கள்

16th Oct 2021 02:29 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேசிய குடும்ப நலத்துறை சாா்பில் அக். 18ஆம் தேதி முதல் குடும்ப நல சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நான்குனேரி, மேலப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆண், பெண் என இருபாலருக்கும் அனைத்து நாள்களிலும் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில், அக். 18, 28ஆகிய தேதிகளில் நான்குனேரி, அக்.21இல் மேலப்பாளையம் மற்றும் முக்கூடல் (ஆரம்ப சுகாதார மையம்), அக். 22இல் சேரன்மகாதேவி ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

தென்காசி: அக். 18, 25 ஆகிய தேதிகளில் சங்கரன்கோவில், அக். 22இல் தென்காசி அரசு மருத்துவமனைகளிலும், அக். 21இல் சொக்கம்பட்டி, அக். 25இல் பாவூா்சத்திரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இம்முகாம்கள் நடைபெறும். மக்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என குடும்ப நல துணை இயக்குநா் மு.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT