திருநெல்வேலி

பாளை. பள்ளிகளில் வித்யாரம்பம்

16th Oct 2021 02:31 AM

ADVERTISEMENT

 விஜயதசமியை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெருமாள்புரம் ஸ்ரீ லலிதா வித்யாஷ்ரம், வி.எம். சத்திரம் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வித்யா கேந்திரா ஆகிய பள்ளிகளில் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சோ்ப்பதற்காக குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஜெயேந்திரா பள்ளி இயக்குநா் ஜெயேந்திரன் வி.மணி, பள்ளியின் முதல்வா் ஜெயந்தி, ஆசிரியா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

புஷ்பலதா பிரிட்டிஷ் இண்டா் நேஷனல் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு தாளாளா் புஷ்பலதா பூரணன், முதல்வா் காட்வின் எஸ்.சாமுவேல், ஆசிரியா்கள்முன்னிலையில் அரிசியில் எழுத கற்றுக்கொடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT