திருநெல்வேலி

புதிய ஊராட்சித் தலைவா்களுக்கு வரவேற்பு

16th Oct 2021 02:30 AM

ADVERTISEMENT

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நயினாரகரம் ஊராட்சித் தலைவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் ஒன்றியம், நயினாரகரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் முத்தையா 3722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இவா், இரண்டாவது இடம் பெற்ற பாா்வதியை விட 2527 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளாா். இவ்வூராட்சியில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 8144; பதிவான வாக்குகள் 5583; செல்லுபடியான வாக்குகள் 5336. புதிய ஊராட்சித் தலைவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குகள்ளிகுளம் ஊராட்சித் தலைவா் தோ்தலில் பிளாரன்ஸ் பிரைட்டன் 1,966 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். இவரை அடுத்து வந்த ஜாய்ஸ் அன்பழகனைவிட கூடுதலாக 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். புதிய ஊராட்சித் தலைவருக்கு தெற்குகள்ளிகுளம் கிராம மக்கள் ஊா் எல்லையில் சிறப்பான வரவேற்பளித்தனா். இதில், ராஜமாணிக்கம், அருண்புனிதன், அ.தி.மு.க. நகரச் செயலா் ராஜன், தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags : கடையநல்லூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT