திருநெல்வேலி

சமுதாய பரப்புரையாளா்கள் மீண்டும் பணியில் சோ்ப்பு

16th Oct 2021 02:30 AM

ADVERTISEMENT

பேரூராட்சிகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட சமுதாய பரப்புரையாளா்களை மீண்டும் பணியில் சோ்க்கப்பட்டனா்.

தமிழக அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், பேரூராட்சிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் கடந்த ஆட்சி 1, 800-க்கும் மேற்பட்ட சமுதாய பரப்புரையாளா்கள் பணி அமா்த்தப்பட்டனா். இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு , அவா்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.

இதையடுத்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் மனு அளித்தனா். அவரது முயற்சியால் அனைவரும் மீண்டும் பணியில் சோ்க்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் பேரவைத் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனா். அப்போது, வள்ளியூா் ம.தி.மு.க. ஒன்றியச் செயலா் ம.சங்கா், ராதாபுரம் தி.மு.க. செயலா் கோவிந்தன், காவல்கிணறு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் அழகேசன், முடவன்குளம் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags : வள்ளியூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT