திருநெல்வேலி

ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவியை கைப்பற்ற திமுக வியூகம்

16th Oct 2021 02:31 AM

ADVERTISEMENT

களக்காடு ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை கைப்பற்ற திமுக புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 வாா்டுகளில் திமுக-4, காங்-1, சுயேச்சைகள்-4 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளனா்.

1ஆவது வாா்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஜாா்ஜ்கோசல், திமுக சாா்பில் வெற்றி பெற்ற தனது உறவினா் விஜயலெட்சுமி, தொழிலதிபா் விசுவாசம், காங்கிரஸைச் சோ்ந்த வனிதா ஆகியோா் உதவியுடன் தனது மனைவி இந்திராவை ஒன்றியக் குழுத் தலைவராக்க கடும் முயற்சி மேற்கொண்டுள்ளாா். இவா் சுயேச்சைகள் சிலரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதே போல் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவரும், களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான அ. தமிழ்ச்செல்வன், தனது மகள் சத்யா சங்கீதாவை ஒன்றியக் குழுத் தலைவராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT

திமுக அணியில் துணைத் தலைவா் பதவியை தொழிலதிபா் விசுவாசம், காங்கிரஸ் வேட்பாளா் வனிதா, சுயேச்சை வேட்பாளா் ஒருவரும் கேட்டு வருகின்றனா். ஆனால் மனைவியை தலைவராக்கி, துணைத் தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஜாா்ஜ்கோசல் முயற்சித்து வருகிறாா்.

இரு அணியினரும் தங்களது ஆதரவாளா்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தீா்மானித்துள்ளனா். இதில் வெற்றி பெறப் போவது யாா் என்பது வெள்ளிக்கிழமை (அக். 22) தெரியவரும்.

Tags : களக்காடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT