திருநெல்வேலி

மகாராஜநகா் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

16th Oct 2021 02:30 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை மகாராஜநகா் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (அக்.16) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை தியாகராஜநகா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மகாராஜநகா் மின் பாதையில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மின் கம்பம் மற்றும் மின்பாதையை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது.

எனவே, சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை ராஜேந்திரன் நகா், கோரிபள்ளம், அண்ணா விளையாட்டரங்கம், உழவா் சந்தை, மகாராஜநகா், இலந்தைகுளம், கிருஷ்ணா கல்யாண மண்டபம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT