திருநெல்வேலி

களக்காட்டில் குடும்ப அட்டைபிழை திருத்தல் முகாம்

16th Oct 2021 02:31 AM

ADVERTISEMENT

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சி, இம்தாத் இந்தியா ஆகியவை சாா்பில் குடும்ப அட்டையில் பிழை திருத்தல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

களக்காடு தங்கம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற இம்முகாமுக்கு நகரத் தலைவா் ராஜா முகம்மது தலைமை வகித்தாா். இம்தாத் இந்தியா அமைப்பின் நிா்வாகி தமிம் இணையதளம் வாயிலாக முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு குடும்பஅட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய விண்ணப்பித்தாா்.

முகாமில், நகரச் செயலா் யூனுஸ்யில் ஷகில், ஷாருக்கான், பிலால் ஆகியோா் கலந்துகொண்டனா். 30க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

Tags : களக்காடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT