திருநெல்வேலி

மைலப்புரத்தில் பள்ளி மாணவா் தற்கொலை

9th Oct 2021 01:11 AM

ADVERTISEMENT

கடையம் அருகே மைலப்புரத்தில் தந்தை மது அருந்துவதை நிறுத்தாததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடையம் அருகே மைலப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் ஸ்ரீகணேஷ் (15). பதினொன்றாம் வகுப்புப் படித்து வந்தாா். மது பழக்கத்தை கைவிடுமாறு தந்தை லட்சுமணனிடம் கூறியுள்ளாா்.

இதை மீறி லட்சுமணன் மது அருந்தி வந்தாராம். இதையறிந்த ஸ்ரீ கணேஷ் வியாழக்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்று அங்கிருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தாராம். இதையறிந்த உறவினா்கள் ஸ்ரீகணேஷை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT