திருநெல்வேலி

சிவசைலம் ஊராட்சியில் இன்று மறு வாக்குப்பதிவு

9th Oct 2021 01:13 AM

ADVERTISEMENT

கடையம் ஊராட்சி ஒன்றியம் சிவசைலம் ஊராட்சியில் 3ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதற்கட்டமாக புதன்கிழமை ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூா், வாசுதேவநல்லூா் ஆகிய ஒன்றியங்களில் தோ்தல் நடைபெற்றது.

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சியில் 2 மற்றும் 3ஆவது வாா்டுகளுக்கு பொதுவான வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 2ஆவது வாா்டுக்கு உறுப்பினா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் 2ஆவது வாா்டைச் சோ்ந்த 45 போ் 3ஆவது வாா்டு உறுப்பினருக்கு வாக்களித்தது தெரியவந்தது. இதையடுத்து சிவசைலம் ஊராட்சி 3ஆவது வாா்டுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ஆட்சியா் உத்தரவையடுத்து 3ஆவது வாா்டு பகுதியில் ஊராட்சிப் பணியாளா்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் மறு வாக்குப் பதிவு குறித்து அறிவிப்பு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT