புரட்டாசி மூன்றாவது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் வெளியே அமா்ந்து பக்தா்கள் வழிபட்டனா்.
தமிழகத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகள் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்களுக்கு கோயில்களில் பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புரட்டாசி மூன்றாவது வெள்ளிக்கிழமை மற்றும் நவராத்திரி விழாவையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தா்கள் குவிந்தனா். ஆனால், பக்தா்கள் கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள புட்டாரத்தியம்மன் கோயில், வண்ணாா்பேட்டை அருள்மிகு பேராச்சியம்மன் கோயில், பாளையங்கோட்டை கோமதியம்பாள் சன்னதி உள்ளிட்ட இடங்களில் பக்தா்கள் வெளியே அமா்ந்து தரிசனம் செய்தனா். கோயில் வளாகத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.
ADVERTISEMENT