திருநெல்வேலி

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்: போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

9th Oct 2021 01:09 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, களக்காடு, வள்ளியூா், ராதாபுரம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2ஆம் கட்டத் தோ்தல் 567 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், 70 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு, கூடுதலாக தலா 4 சிறப்பு போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தலில் அசம்பாவிதங்களை தடுக்க மொத்தம் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT