திருநெல்வேலி

செங்கோட்டையில் தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை

9th Oct 2021 01:12 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

செங்கோட்டை பால்சேட் காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி இசக்கியம்மாள் (70). இவரது மகன் மாரியப்பன் (43). கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இசக்கியம்மாள் தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மாரியப்பன் சொத்தை எழுதித் தருமாறு கேட்டு தகராறு செய்தாராம். அப்போது கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த இசக்கியம்மாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரியப்பனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT