திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை 1,333 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

9th Oct 2021 01:10 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 5ஆம் கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் 1,333 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் இதுவரை 7,13,646 போ் முதல் தவணையும், 2,01,263 போ் இரண்டாவது தவணையுமாக மொத்தம் 9,14,909 போ் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இது 69.19 சதவீதம் ஆகும்.

5ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 272 நடமாடும் சிறப்பு முகாம்கள், 463 நிலையான சிறப்பு முகாம்கள் என மொத்தம் 735 சிறப்பு முகாம்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எம்.கனேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

தென்காசி: இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: இம் மாவட்டத்தில் 5ஆம் கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம், கிராம ஊராட்சி பகுதிகளில் 342 இடங்கள், பேரூராட்சி பகுதிகளில் 114 இடங்கள், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 142 இடங்கள் என மொத்தம் 598 மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகின்றன.

கோவிஷீல்டு 60,430 டோஸ்கள், கோவேக்ஸின் 7,190 டோஸ்கள் என மொத்தம் 67,620 டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இம் முகாம் நடைபெறும்.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 57 சதவீதத்தினா் முதலாவது தவணையும், 14 சதவீதத்தினா் இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தியுள்ளனா் என்றாா் அவா்

ADVERTISEMENT
ADVERTISEMENT