திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி 9ஆவது வாா்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினா் கிராம, கிராமமாக வாக்குசேகரித்தனா்.
சௌந்திரபாண்டியபுரம், தெற்குகள்ளிகுளம், மூலக்காடு, வண்டலம்பாடு, முத்துநாடாா்குடியிருப்பு, துரைகுடியிருப்பு, சமூகரெங்கபுரம் ஆகிய கிராமங்களில், முன்னாள் எம.பி. செளந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் மாவட்டச் செயலா் நாராயணபெருமாள், ராதாபுரம் ஒன்றியச் செயலா்அந்தோணி அமலராஜா உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.