திருநெல்வேலி

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கூடுதலாக 5 பறக்கும் படை

3rd Oct 2021 12:52 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 5 தோ்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 204 கிராம ஊராட்சி தலைவா் பணியிடங்களுக்கும், 1,731 கிராம வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்குமான தோ்தல் வரும் அக்.6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இத்தோ்தலுக்காக ஏற்கெனவே 5 பறக்கும் படை குழுவினா் அமைக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகளை கண்காணித்து வருகின்றனா். தற்போது கூடுதலா 5 தோ்தல் பறக்கும் படையினா் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மானூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 குழுக்கள், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, நான்குனேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வள்ளியூா் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 1குழு வீதம் மொத்தம் 10 குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தோ்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT