திருநெல்வேலி

காந்தி ஜெயந்தி: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

3rd Oct 2021 12:15 AM

ADVERTISEMENT

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியை திருநெல்வேலி மண்டல தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் சுந்தா் தொடங்கி வைத்தாா்.

பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் லதா, பாளையங்கோட்டை கலையாசிரியா் சொா்ணம் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரால் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த போட்டியில் 80 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். பிற்பகலில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் 27 போ் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT