திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் பெண் வேட்பாளருக்கு மிரட்டல்: 8 போ் கைது; காவல்நிலையம் முற்றுகை

3rd Oct 2021 12:52 AM

ADVERTISEMENT

முன்னீா்பள்ளம் ஊராட்சி தலைவா் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளரை மிரட்டியதாக 8 பேரை போலீஸாா் கைது செய்ததையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி முன்னீா்பள்ளம் ஊராட்சி தலைவா் பதவிக்கு போட்டியிடுபவா் உமா. இவா் அங்குள்ள முல்லை நகா் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டாராம். அப்போது, அங்கு வந்த ஒரு தரப்பினா் உமாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து உமா, முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் மேலக் கருங்குளம் லெனின்(32), முல்லை நகா் சரவணன் (23), சூா்யா(19) உள்பட 8 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதனைக் கண்டித்து முல்லை நகா் பகுதி பொதுமக்கள், முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த காவல் உதவி கண்காணிப்பாளா் பாா்த்திபன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT