திருநெல்வேலி

பணகுடியில் காந்தி ஜெயந்தி விழா

3rd Oct 2021 12:26 AM

ADVERTISEMENT

 

பணகுடியில் காந்தி ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பணகுடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பேரவைத் தலைவா் மு. அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, திருநெல்வேலி எம்.பி. சா. ஞானதிரவியம் மாலை அணிவித்தாா்.

மதிமுக வள்ளியூா் ஒன்றியச் செயலா் மு. சங்கா், திமுக நகரச் செயலா் தமிழ்வாணன், அசோக்குமாா், மு.க. மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

வள்ளியூா் பழைய பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட காந்தி படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வள்ளியூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே காந்தி படத்துக்கு காங்கிரஸ் கட்சி நகரத் தலைவா் அல்போன்ஸ் ராஜா தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT