திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 48,938ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 போ் உள்பட இதுவரை 48,279 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 229 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தென்காசி மாவட்டத்தில், மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 27,287ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 போ் உள்பட இதுவரை 26,752 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 51 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.