திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களில் போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநகரில் போலீஸாா் இரவு நேரங்களில் திடீா் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா்.
அதன்படி, திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், வண்ணாா்பேட்டை ரவுண்டானா, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மேலப்பாளையம் சந்தை முக்கு, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம் ஆா்ச் உள்ளிட்ட சுமாா் 20 இடங்களில், தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனச்சோதனை நடைபெற்றது.
இதில், சுமாா் 500 க்கும் மேற்பட்ட போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், இருசக்கர வாகனங்கள், காா், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் போலீஸாரின் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பப்பட்டன. இதில், சில முக்கிய குற்றவாளிகள் பிடிபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.