திருநெல்வேலி

நெல்லையில் இன்று சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்

3rd Oct 2021 12:51 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சியில் 4ஆவது முறையாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் 137 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் உத்தரவுபடி மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள திருநெல்வேலி, தச்சநல்லூா், மேலப்பாளையம், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை 137 இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT