திருநெல்வேலி

களக்காட்டில் மழை

3rd Oct 2021 12:26 AM

ADVERTISEMENT

 

களக்காட்டில் சனிக்கிழமை தொடா் சாரல் பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நிகழாண்டு களக்காடு பகுதியில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழைக்கு அச்சாரமாக களக்காடு சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை காலை முதலே லேசான மழை பெய்தது. நண்பகல் 12 மணிக்குப் பின் விட்டுவிட்டு சாரல் பெய்தது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இந்த மழையால் மகிழ்ச்சியடைந்ததாக, வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT