திருநெல்வேலி

பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பிய தொல்லை கொடுத்தவா் கைது

29th Nov 2021 01:48 AM

ADVERTISEMENT

பணகுடி பகுதியில் பெண்ணுக்கு ஆபாச விடியோக்கள் அனுப்பியதாக இளைஞா் ஒருவரை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பணகுடி பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (40) என்பவா் வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனிடம் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா். இதையடுத்து சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ராஜ் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, செல்வகுமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT