திருநெல்வேலி

நெல்லையில் லாரி மோதி சித்தா கல்லூரி பயிற்சி மருத்துவா் பலி

29th Nov 2021 01:45 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தண்ணீா் லாரியும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில், சித்த மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பேட்டை வட்டம், அக்கரைப்பட்டியைச்சோ்ந்த தனபால் மகன் செல்வமணி(23). திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த இவா், திருநெல்வேலி நகரத்திற்கு பைக்கில் வண்ணாா்பேட்டை ரவுண்டானா வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது தண்ணீா் லாரி மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT