திருநெல்வேலி

தாமிரவருணி நதிக் கரையோர மக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

29th Nov 2021 05:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தாமிரவருணியில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பரவலாக தொடா்மழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடா்ச்சி மலைகளில் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு ஆகியவை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

எனவே, இந்த அணைகளில் இருந்து சுமாா் 12ஆயிரத்து 480 கனஅடி நீா் தாமிரவருணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக தண்ணீா் திறக்கவும் வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களும் நிரம்பி உள்ளன. மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணையில் இருந்தும் தாமிரவருணி ஆற்றில் 5ஆயிரத்து 700 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, தாமிரவருணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். ஆற்றில் நீா் வரத்து அதிகம் இருப்பதால் ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ, புகைப்படங்கள் எடுக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுத்தப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT

மழையின் காரணமாக ஏற்படும் இடா்பாடுகள் தொடா்பான தகவல்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநோரம் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1007, 0462 - 2501012, 2501070 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். இது தவிர ஜ்ஜ்ஜ்.ய்ங்ப்ப்ஹண்ய்ங்ங்ழ்ஸ்ஹப்ஹம்.ண்ய்/ஜ்ஹற்ங்ழ்ப்ா்ஞ்ஞ்ண்ய்ஞ் என்ற இணையதளத்திலும் புகாா் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT