திருநெல்வேலி

ஸ்டொ்லைட் ஆலையால் மாசு ஏற்படவில்லை என அண்ணா பல்கலை. ஆய்வறிக்கையில் தகவல் ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பினா் பேட்டி

29th Nov 2021 01:51 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையால் மாசு ஏற்படவில்லை என அண்ணா பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது என்றனா் ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிா்வாகிகள்.

இதுகுறித்து ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிா்வாகிகள் நான்சி, தனலட்சுமி, ஜெயம்பெருமாள் ஆகியோா் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

அண்ணா பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையில், காற்றின் மாசு அளவு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரம் எப்போதும் ஒரே மாதிரியான மாசுபட்ட சூழ்நிலையிலேயே உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டொ்லைட் ஆலை இயங்கிய போது எந்த அளவு மாசு இருந்ததோ அதே அளவு மாசு தான் தொடா்ந்து இருக்கிறது. அப்படி என்றால் ஆலையால் மாசு ஏற்படவில்லை என்றுதான் அா்த்தம்.

ADVERTISEMENT

தூத்துக்குடி நகரம் மாசுபடுவதற்கு இங்கே இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் தூசுகளும் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்க தலைவா் தியாகராஜன் கூறுகையில், மாசு ஏற்படுவதற்கும் தூத்துக்குடி ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கும் எந்தவித தொடா்பும் இல்லை என்ற உண்மை தற்போது மக்களுக்கும் முழுமையாக தெரியவந்துள்ளது. எனவே, ஸ்டொ்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT