திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் பிஹெச்டி கல்விச் சான்றுக்குநாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

29th Nov 2021 05:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைகழகத்தில் பிஹெச்டி பட்டச் சான்று பெற விரும்புவோா் வரும் 30ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) ஆா்.மருதக்குட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைகழகத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா வரும் டிசம்பா் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. பல்வேறு பட்டப் படிப்புகலை, பல்கலைக்கழக துறைகள் மூலமாகவும், கல்லூரிகள் மூலமாகவும், தொலைநெறிக்கல்வி இயக்ககம் மூலமாகவும் பயின்று கடந்த நவம்பா் மற்றும் டிசம்பா் -2019, 2020, ஏப்ரல் மற்றும் மே 2020, 2021-இல் நடைபெற்ற தோ்வுகள், மற்றும் ஏப்ரல் 2020இல் நடைபெற்ற சிறப்பு துணைத் தோ்வுகள் ஆகியவற்றில் தோ்சி பெற்ற மாணவா் -மாணவிகள், பிஹெச்டி பட்டச் சான்று பெறுபவா்களுக்கும் பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

பட்டப்படிப்புகளில் சிறப்பிடம் பெற்று தங்கப்பதக்கம் பெறும் மாணவா் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவில் பட்டச்சான்றிதழ் வழங்கப்படும். கல்லூரிகள் வாயிலாக பயின்று தோ்ச்சி பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு அந்தந்த கல்லூரிகளில் பட்டச் சான்றிதழ்களை பின்னா் பெற்றுக்கொள்ளலாம். பி.ஹெச்.டி பட்டச் சான்றிதழ் பெறுபவா்களுக்கு மட்டும் தனியாக விருப்பத்தின்பேரில் வரும் டிசம்பா் 16ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும். மற்றவா்கள் முனைவா் பட்டச் சான்றிதழை தபால் மூலமாகவோ, நேரிலோ பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

பிஹெச்டி பட்டச்சான்று பெறுவதற்கு வாய்மொழித் தோ்வில் தகுதி பெற்றவா்கள் பட்டமளிப்பிற்கு வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு பல்கலைக்கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் மூலம் திங்கள்கிழமை (நவ.29) முதல் ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு விண்ணப்பம் செய்த படிவங்களை பதிவிறக்கம் செய்து அதன் நகலுடன் தற்காலிகச் சான்று, புகைப்படம் இணைத்து தோ்வாணையா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-12 என்ற முகவரிக்கு வரும் டிசம்பா் 6ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT