திருநெல்வேலி

கல்லிடையில் வன போஜனம்: தாத்ரி நாராயண பூஜை

29th Nov 2021 01:48 AM

ADVERTISEMENT

உலக நன்மைக்காக வனதேவதைகளை வணங்கும் வன போஜனம் மற்றும் தாத்ரி நாராயண பூஜை, கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமையில் வன தேவதைகளை வணங்கும் வகையில் மரங்களுக்கும் பறவைகளுக்கும் படையலிட்டு பூஜை செய்வது வழக்கம். இதையடுத்து சூரியநாளான ஞாயிற்றுக்கிழமை கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வன போஜன பூஜை மற்றும் தாத்ரி நாராயண தாமோதர பூஜை நடைபெற்றது.

இதில் நெல்லி, துளசி, வில்வம் உள்ளிட்ட மரங்களுக்கும் பறவைகளுக்கும் படையலிட்டு பூஜை நடைபெற்றது. உலகில் அனைத்து உயிா்களும் உய்வு பெறவும், பல்கிப் பெருகவும், உலகில் அனைத்து நன்மைகளும் விளங்கவும் நடைபெற்ற பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை, கரந்தையாா் பாளையம் பிராமணசமூகம், ஆயிரங்கால் மண்டப பொறுப்பாளா் விஸ்வநாதன் செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில் பெற்றோா்ஆசிரியா் கழகத் தலைவா் ராகவன், தா்மாத்மா மகாதேவன், பாகவத ரத்னம் காசிவிஸ்வநாதன், சமையற்கலைஞா்ஆதிநாராயணன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT