திருநெல்வேலி

பொட்டல்புதூரில் ரத்த தான முகாம்

29th Nov 2021 01:47 AM

ADVERTISEMENT

பொட்டல் புதூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். தென்காசி அரசு மருத்துவமனை உதவி அறுவை சிகிச்சை மருத்துவா் மணிகண்டன் தலைமையில் செவிலியா்கள் உத்தமவா்ஷினி, பதா் நிஷா, ராஜி ப்ரியதா்ஷினி, ஆய்வக உதவியாளா் ஹரிஹர முத்து ஆகிய மருத்துவக் குழுவினா், 23 பேரிடமிருந்து ரத்தம் சேகரித்தனா்.

மாவட்டச் செயலா் தினகரன், தொகுதித் தலைவா் முத்துராசு ஈசாக்கு, மகளிா் பாசறைச் செயலா் சங்கீதா, நிா்வாகிகள் ஷேக், பைசல் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT