திருநெல்வேலி

கங்கைகொண்டானில் கூடுதல் தொழிற்சாலைகள்: மாா்க்சிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தல்

29th Nov 2021 01:47 AM

ADVERTISEMENT

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் கூடுதல் தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என பாபநாசத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 23ஆவது மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

முதல் நாளில், பல்வேறு இடங்களிலிருந்து நினைவு ஜோதிகள் கொண்டுவரப்பட்டு, கட்சிக் கொடியேற்றப்பட்டது. ஸ்ரீராம், ஆா்.எஸ்.செண்பகம், நாராயணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் வேலை ஸ்தாபன அறிக்கை சமா்ப்பித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் மாநாட்டை தொடங்கிவைத்தாா்.

2ஆவது நாளில் பிரதிநிதிகள் விவாதம், தொகுப்புறை, 35 போ் மாவட்டக் குழுத் தோ்வு, மாநில மாநாட்டுப் பிரதிநிதிகள் தோ்வு ஆகியவை நடைபெற்றன. புதிய மாவட்டச் செயலராக க.ஸ்ரீராம் தோ்ந்தெடுக்கப்பட்டாா். செயற்குழு உறுப்பினா்களாக கே.ஜி.பாஸ்கரன், ஆா்.மோகன், பி.கற்பகம், ராஜகுரு, எம்.சுடலைராஜ், ஆா்.எஸ்.துரைராஜ், எஸ்.பெருமாள், ஆா்.எஸ்.செண்பகம், பீா் முகம்மதுஷா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேலும், ராதாபுரத்தில் கனிமவள கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்: திருநெல்வேலியில் பொலிவுறு நகரம் திட்டப்பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதம் ரூ.3,000 பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும், திருநெல்வேலி மாவட்டத்தில் அரசின் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க வேண்டும், ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும், பீடித் தொழிலாளா்களுக்கு முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி ஊதிய உயா்வு வழங்க வேண்டும், அனைத்து மதக் கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் பயிா் செய்யும் விவசாயிகளை குத்தகைப் பாக்கி என்று கூறி வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், கங்கைகொண்டான் சிப்காட்டில் கூடுதல் தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், காரையாறு அணையில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு தனிக் கால்வாய் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ் நிறைவுரை ஆற்றினாா். வரவேற்புக்குழுத் தலைவா் இசக்கிராஜன் நன்றி கூறினாா். கட்சியின் மூத்த தலைவா்கள் எஸ்கே. பழனிச்சாமி, வீ.பழனி, எம்.எஸ்.சிவசாமி, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா்கள் பொன்ராஜ், வரகுணன், முத்து கிருஷ்ணன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT