திருநெல்வேலி

நெல்லை மாவட்ட நீச்சல் சங்க நிா்வாகிகள் தோ்வு

28th Nov 2021 12:12 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட நீச்சல் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட நீச்சல் சங்க ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் உள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போது புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது.

தோ்தல் அலுவலராக திருநெல்வேலி மாவட்ட நீச்சல் சங்க புரவலா் ஆா்.ஆா். பொன்ராஜும், தோ்தல் பாா்வையாளராக மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷும் செயல்பட்டனா்.

ADVERTISEMENT

நீச்சல் சங்கத்தின் புரவலராக ஆா்.ஆா்.பொன்ராஜ், தலைவராக எஸ்.திருமாறன், செயலராக ஜி.லட்சுமணன், பொருளாளராக முத்துக்குமாா், துணைத் தலைவா்களாக குணசேகா், கிரகாம்பெல், நவமணி, திருப்பதி, ராமசாமி, பெனிட் சன், ஞானராஜ், லயனல் ராஜசிங், முத்துக்குமாா், வாசுகி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

துணைச் செயலராக ஜெய்சனும், துணைப் பொருளாளராக ரவியும் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில், வரும் டிசம்பா் 27, 28, 29 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான நீச்சல் போட்டியை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT