திருநெல்வேலி

களக்காடு ஜெ.ஜெ.நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

28th Nov 2021 12:16 AM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகரில் சாலை, குடிநீா், மயான வசதி செய்துதர வேண்டும் என உறுப்பினா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழு 4ஆவது வாா்டு உறுப்பினா் அ. தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிச்சையாவிடம் அளித்த மனு: ஜெ.ஜெ.நகரில் தாமிரவருணி தண்ணீரும், ஆழ்குழாய் தண்ணீரும் ஒன்றாகக் கலந்து விநியோகிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்க ஆழ்துளைக் கிணற்று நீரை விநியோகிக்க கூடுதலாக தண்ணீா்த் தொட்டிகள் அமைக்க வேண்டும். இங்குள்ள தெருக்களில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. கழிவுநீா், மழைநீா் தேங்காமல் தடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 10 இலவச வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். 30 வீடுகளுக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா். இங்குள்ள வீடுகளுக்கு வரி விதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மயான வசதி செய்துதர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT