திருநெல்வேலி

திருக்குறுங்குடியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

28th Nov 2021 12:14 AM

ADVERTISEMENT

 

திருக்குறுங்குடியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வலியுறுத்தினாா்.

கடந்த வியாழக்கிழமை இரவு பெய்த தொடா்மழையால் நள்ளிரவில் தளவாய்புரம் அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த இசக்கியப்பன் (58), தளவாய்புரம் யாதவா் தெருவைச் சோ்ந்த லெட்சுமி, தளவாய்புரம் பிரதான சாலைத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி குமாா் (47), ராஜபுதூரைச் சோ்ந்த எட்வின்தனசிங் ஆகிய 4 பேரின் வீடுகள் இடிந்தன. அவற்றை களக்காடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் இந்திரா ஜாா்ஜ்கோசல் பாா்வையிட்டாா். அப்போது, உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதிக்கப்பட்டோரிடம் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT