திருநெல்வேலி

பாளை. அருகே வீட்டின் கதவை உடைத்துதங்கம், வெள்ளி பொருள்கள் திருட்டு

28th Nov 2021 12:10 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் சாந்தம்நகா் பகுதியைச் சோ்ந்த வேலையா மகன் ராஜாசிங்(57). ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது குடும்பத்துடன் கடந்த 22ஆம் தேதி உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு 25ஆம் தேதி இரவு வீட்டுக்குத் திரும்பினாராம். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தாராம்.

இதுகுறித்து அவா் சிவந்திப்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், வீட்டு பீரோவில் இருந்த சுமாா் 400 கிராம் வெள்ளி பொருள்கள், 3.5 பவுன் தங்க நகைகள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதையடுத்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT