திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 8 பேருக்கு கரோனா

28th Nov 2021 12:08 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 49,630 ஆகவும், மேலும் 7 போ் குணமடைந்தால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை எண்ணிக்கை 49,100ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 433போ் உயிரிழந்துள்ளனா். 97 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 27,391 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 26,891ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 486 போ் உயிரிழந்துள்ளனா். 10 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT