திருநெல்வேலி

களக்காடு ஊராட்சி ஒன்றியக்குழு முதல் கூட்டம்

28th Nov 2021 12:15 AM

ADVERTISEMENT

 

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் ஜா. இந்திரா ஜாா்ஜ்கோசல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிச்சையா, மங்கையா்க்கரசி, துணைத் தலைவா் விசுவாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா்கள் தமிழ்செல்வன், ஜாா்ஜ்கோசல், சங்கீதா, வனிதா, விஜயலெட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

மேலதுவரைக்குளத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும், நான்குனேரியன் கால்வாயைத் தூா்வாரி, அதில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் என தமிழ்ச்செல்வனும், மேலக்காடுவெட்டியில் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என வனிதாவும் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் பிச்சையா, நிதி நிலைக்கேற்ப அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். பிற துறைகள் மூலமாக நிறைவேற்றப்படவேண்டிய கோரிக்கைகள் அந்தந்தத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி தீா்வு காணப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT