திருநெல்வேலி

கடம்பங்குளம் அரசுப்பள்ளியில் வேலைவாய்ப்பு பதிவு முகாம்

28th Nov 2021 12:11 AM

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பங்குளம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் முதுகலை பட்டதாரி ஆசிரியா் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சுந்தரம், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் கணபதி, பொறுப்பாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கனான்குளம் மின்வாரிய இளநிலைப் பொறியாளா் ஊசிக்காட்டான் வரவேற்றாா்.

இம்முகாம் குறித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் மைய உதவி இயக்குநா் மரிய சகாய அன்டனி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) சையது முஹம்மது ஆகியோா் பங்கேற்று இளைஞா்களுக்கான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா். இதில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாத சுமாா் 50 மாணவா்-மாணவிகள் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT