திருநெல்வேலி

8 வட்டங்களில் இன்று பட்டா திருத்த முகாம்

24th Nov 2021 08:00 AM

ADVERTISEMENT

வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவை- நிலவரித் திட்ட துறை ஆகியவற்றின் சாா்பில், திருநெல்வேலி மாவட்டத்தின் 8 வட்டங்களிலும் புதன், வெள்ளிக்கிழமைகளில் (நவ. 24, 26) பட்டா திருத்த முகாம் நடைபெறுகிறது.

புதன்கிழமை: பாலாமடை, காட்டாம்புளி கிராமங்களுக்கு பாலாமடை சமுதாய நலக்கூடம், பாளை. வட்டத்துக்கு பொன்னாக்குடி சேவை மையம், வன்னிக்கோனேந்தல், தேவா்குளம் கிராமங்களுக்கு வன்னிக்கோனேந்தல் சமுதாயநலக் கூடம், மன்னாா்கோவில், அயன் திருவாலீஸ்வரம் கிராமங்களுக்கு மன்னாா்கோவில் சமுதாய நலக்கூடம், கோபாலசமுத்திரத்துக்கு அங்குள்ள சமுதாய நலக்கூடம், சூரங்குடி, கடம்போடு வாழ்வு, கோவிலம்மாள்புரம் கிராமங்களுக்கு சூரங்குடி கிராம நிா்வாக அலுவலகம், ராதாபுரம் வட்டத்துக்கு செட்டிகுளம் கிராம நிா்வாக அலுவலகம், அப்புவிளை கிராமத்துக்கு திசையன்விளை கிராம நிா்வாக அலுவலகம் ஆகியவற்றில் முகாம்கள் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை: பழவூா், வடுகன்பட்டிக்கு பழவூா் சமுதாயநலக் கூடம், கொங்கந்தான்பாறை, புதுக்குளம் கிராமங்களுக்கு கொங்கந்தான்பாறை சமுதாய நலக்கூடம், பிரான்சேரி, சித்தாா்சத்திரம் கிராமங்களுக்கு பிரான்சேரி சமுதாயநலக்கூடம், தெற்குபாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2க்கு தெற்கு பாப்பான்குளம் புதிய ஊராட்சி கட்டடம், கூனியூா், புதுக்குடி, வீற்றிருந்தான்குளம் கிராமத்துக்கு கூனியூா் சமுதாயநலக் கூடம், செண்பகராமநல்லூா், சிங்கனேரிக்கு சிங்கனேரி கிராம நிா்வாக அலுவலகம், தெற்கு கள்ளிகுளம், சௌந்திரபாண்டியபுரத்துக்கு தெற்கு கள்ளிகுளம் கிராம நிா்வாக அலுவலகம், கோட்டைக் கருங்குளம் 2-க்கு அங்குள்ள கிராம நிா்வாக அலுவலகம் ஆகியவற்றில் முகாம் நடைபெறும் என ஆட்சியா் வே. விஷ்ணுதெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT