திருநெல்வேலி

களக்காடு - வள்ளியூா் நகரப் பேருந்தை இயக்க வலியுறுத்தல்

24th Nov 2021 07:58 AM

ADVERTISEMENT

களக்காடு - வள்ளியூா் இடையே இயக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜா. இந்திரா, திருநெல்வேலி போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

களக்காடு - வள்ளியூா் இடையே தடம் எண். 1, 5 ஆகிய இரண்டு நகரப் பேருந்துகள் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த இரண்டு அரசு நகரப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் களக்காடு - வள்ளியூா் வழித்தடத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் தமிழக முதல்வரின் பேருந்துகளில் கட்டணமில்லா சேவையை பயன்படுத்த முடியாமல் புகா் மற்றும் தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது. நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT