திருநெல்வேலி

வாா்டு மறுவரையறைக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம்

23rd Nov 2021 05:43 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக மாற்றப்பட்டுள்ள வாா்டு வரையறையில் குளறுபடிகள் உள்ளதால் அதனை ரத்து செய்துவிட்டு சீரமைக்கக்கோரி மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனால் 3,500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத் தோ்தலையொட்டி ஏற்கெனவே மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வாா்டுகள் வரையறை செய்யப்பட்டன. திருநெல்வேலி மாநகராட்சியை பொருத்தவரை திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களின் கீழ் மொத்தம் 55 வாா்டுகள் உள்ளன. தச்சநல்லூரில் இருந்து 1 ஆவது வாா்டு தொடங்கும் வகையில் உள்ளது. இப்போது மக்கள் தொகைக்கு ஏற்ப வாா்டுகளை பிரித்து பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலப்பாளையம் மண்டலத்தைப் பொருத்தவரை அதிக மக்கள் தொகை கொண்டதாக வாா்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புகா் பகுதிகளை இணைக்கப்பட்டுள்ளன. இதில், குளறுபடிகள் உள்ளதாக ஆட்சேபம் தெரிவித்து மேலப்பாளையத்தில் அனைத்துக்கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சாலை, நேதாஜிசாலை, பஜாா்திடல், கொட்டிக்குளம் கடைவீதி, ஜின்னாதிடல் பகுதிகள், கரீம் நகா் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: அனைத்துக்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். மாநகராட்சி வாா்டு உறுப்பினா்களின் பணி மிகவும் அத்தியாவசியமானது. குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீரோடை உள்ளிட்ட பணிகளின் குறைபாடுகளுக்கு அவா்களையே நாட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கெனவே இருந்ததுடன் கூடுதல் வாா்டுகளை மேலப்பாளையம் மண்டலத்திற்கு ஒதுக்குவதோடு, புகா் பகுதிகளை பெருமளவு இணைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT