திருநெல்வேலி

கே.டி.சி.நகரில் இளைஞா் தற்கொலை

23rd Nov 2021 05:20 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: பாளையங்கோட்டை , கே.டி.சி. நகா் பகுதியில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்த சுப்புராயலு மகன் விஜயராமராஜ்(24). பட்டதாரியான இவா், தனக்கு வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை இவரின் குடும்பத்தினா் அனைவரும் வெளியூா் கோயிலுக்குச் சென்றிருந்தனா்.

வீட்டில் தனியாக இருந்த அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT