திருநெல்வேலி

பேட்டையில் விழிப்புணா்வுப் பேரணி

21st Nov 2021 12:26 AM

ADVERTISEMENT

பேட்டை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் ‘விதைப்பந்தை வீசுவோம் புவிப்பந்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை பள்ளித் தலைமையாசிரியை வி.தங்கத்தாய் தொடங்கிவைத்தாா். என்.சி.சி. மாணவிகள், ஆசிரியா்கள் பேரணியில் பங்கேற்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. தொடா்ந்து அருகேயுள்ள கிராமங்களுக்குச் சென்று விதைப்பந்துகளை தூவினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT