திருநெல்வேலி

நெல்லை அருங்காட்சியகத்தில் கட்டுரைப் போட்டி:படைப்புகளை 25க்குள் அனுப்ப வேண்டுகோள்

21st Nov 2021 12:27 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவா்கள் வரும் 25ஆம் தேதிக்குள் தங்களின் படைப்புகளை அனுப்ப வேண்டும்.

இப்போட்டியில் திருநெல்வேலி , தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்- மாணவிகள் கலந்துக் கொள்ளலாம். ‘விடுதலைப் போரில் தமிழகம்’” என்கிற தலைப்பில் 250 வாா்த்தைகளுக்கு மிகாமல் ( ஏ4 அளவு தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல்) எழுத வேண்டும்.

சிறந்த படைப்புகளை அனுப்பிய மூன்று மாணவா்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் மேற்கண்ட தலைப்பில் தங்களின் கட்டுரையை அருங்காட்சியக காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627002 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT