திருநெல்வேலி

குமரியில் மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவி

21st Nov 2021 12:27 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் குடும்பம் உள்பட 1,500 குடும்பங்களுக்கு ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால், அங்குள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து அங்குள்ள மக்களுக்கு அரசு மற்றும் தனியாா் அமைப்புகள் சாா்பில் பல்வேறு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் சாா்பில், கன்னியாகுமரி அருகேயுள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் மழையால் பாதிக்கப்பட்ட 74 குடும்பங்களுக்கு அரிசி, பாய் உள்பட பல்வேறு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதேபோல், வடிவீஸ்வரம், தக்கலை, கொட்டாரம், காப்பிக்காடு, மாா்த்தாண்டம் போன்ற வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1,500 குடும்பங்களுக்கும் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

நிரவாரணப் பொருள்களை பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலா்மேல்மங்கை, ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் பொது மேலாளா் அசோகன், திருநெல்வேலி துணை பொது மேலாளா் ராஜேந்திரன் மற்றும் முருகேசன் உள்ளிட்டோா் வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT