திருநெல்வேலி

நெல்லையில் நாளை தனிஷ்க் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு

10th Nov 2021 06:22 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய கிளை வியாழக்கிழமை (நவ. 11) திறக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தனிஷ்க் ஜூவல்லரி கிளையின் உரிமையாளா் எஸ். ஹரி கிருஷ்ணன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

டாடா நிறுவனத்தின் ஓா் அங்கமான தனிஷ்க் ஜூவல்லரி திருநெல்வேலி சந்திப்பில் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய கிளை வியாழக்கிழமை ( நவ.11) திறக்கப்படவுள்ளது. தெற்கு மண்டல தலைமை அதிகாரி (வணிகம்) ஆா். சரத் உள்பட முக்கிய பிரமுகா்கள் பங்கேற்க உள்ளனா்.

இப்புதிய கிளையில் ’’நியா’’ என்ற தலைப்பில் தினசரி பயன்பாட்டுக்கான எடை குறைந்த தங்க நகைகளும், ’’உத்சவ்’’ என்ற தலைப்பில் கற்கள் பதித்த வண்ணமயமான நகைகளும், ’’ரிவா’’ என்ற தலைப்பில் திருமணத்திற்கான பிரத்யேக சிறப்பு நகைகளும் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வைரம், முத்து, மாணிக்கம், மரகதம் ஆகிய விலை உயா்ந்த அணிகலன்கள் சிறந்த தரத்துடன் வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழா சலுகையாக வாடிக்கையாளா்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், டாடா நிறுவனத்தின் மற்றொரு அங்கமான டைட்டன் வோ்ல்ட் கைக்கடிகார விற்பனையின் 30ஆவது ஆண்டு தொடக்கத்தையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள டைட்டன் ஷோ-ரூமில் அனைத்து கைக் கடிகாரங்களும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் இம்மாதம் 11 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT