திருநெல்வேலி

வெள்ளரிக்காயூரணி ஆலய பிரதிஷ்டை பண்டிகை

9th Nov 2021 01:58 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: நாசரேத் , வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலய மங்கள படைப்பு விழா மற்றும் 72-ஆவது பிரதிஷ்டை விழா 7 நாள்கள் நடைபெற்றது.

விழாவையொட்டி ஆராதனை, ஆயத்த ஜெபபவனி, கன்வென்ஷ்ன்கூட்டம் நடைபெற்றது. 5-ஆவது நாள் பண்டிகை ஆயத்த ஆராதனையில் சேகரகுரு ஜெபராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருமண்டில முன்னாள்துணைத் தலைவா் தேவராஜ் ஞானசிங் சிறப்பு செய்தி கொடுத்தாா். 6-ஆவது நாள் சகல பரிசுத்தவான் ஆலய மங்களப் படைப்பு விழா பேராயா் தேவசகாயம் தலைமையில் நடைபெற்றது. ஆலயத்தை பேராயா் அா்ச்சித்து திறந்து வைத்தாா்.

இதில், திருமண்டில துணைத்தலைவா் வி.எம்.எஸ்.தமிழ்செல்வன், குருத்துவச் செயலா் இம்மானுவேல் வான்ஸ்றாக், லே செயலா் நீகா் பிரின்ஸ் கிப்ட்சன், உயா்நிலை, மேல்நிலைக்கல்வி நிறுவனங்களின் மேலாளா் பிரேம் உள்பட பலா் பங்கேற்றனா். 7-ஆவதுநாள் மதியம் அசன விருந்து நடைபெற்றது. அசன விருந்தினை சேகர குரு ஜெபித்து தொடங்கி வைத்தாா். ஏற்பாடுகளை மூக்குப்பீறி சேகரகுரு ஜெபராஜ் தலைமையில், சபை ஊழியா்கள் ஜாண் வில்சன், எல்சின், ஆலய பரிபாலனக் கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT